Published : 06 Jan 2021 01:44 PM
Last Updated : 06 Jan 2021 01:44 PM

'கபடதாரி' வெளியீட்டுத் தேதி முடிவு

சென்னை

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கபடதாரி' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கபடதாரி'. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கி செப்டம்பர் 29-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

முழுமையாக இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பல படங்கள் வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன.

அந்த வரிசையில் 'கபடதாரி' படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 28-ம் தேதி தைப்பூச தினமாகும். அன்றைய தினத்தைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆதலால், அன்றைய தினத்தை வெளியீட்டுத் தேதியாக முடிவு செய்து, படக்குழுவினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x