Published : 03 Jan 2021 05:39 PM
Last Updated : 03 Jan 2021 05:39 PM

தனுஷ் படத்தில் கூடுதல் திரைக்கதை, வசனங்கள் எழுதும் பாடலாசிரியர்

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் கூடுதல் திரைக்கதை, வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதவுள்ளார்.

தொடர்ந்து தீவிரமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வரஜ இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இந்தியில் அத்ரங்கி ரே, தமிழி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் திரைப்படம், ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என்று நடிக்கிறார்.

இவை தவிர க்ரே மேன் என்கிற ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2விலும் நடிக்கிறார். இதற்கு நடுவில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்போதைக்கு D43 என்று அழைக்கப்படும் இப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முதல்முதலாக வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் படம் இதுவே. ஹே சண்டக்காரா, ஏய் சுழலி, ஆளப்போறான் தமிழன், ஒரு விரல் புரட்சி, சிம்டாங்காரன், மரண மாஸ், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x