ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் யோகி பாபு

ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் யோகி பாபு

Published on

யோகி பாபு - மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கும் மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட திருமணம் என்றாலும், பின்பு திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டார் யோகி பாபு.

கரோனா அச்சுறுத்தலால் திருமண வரவேற்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே கர்ப்பமானார் மஞ்சு பார்கவி. ஜனவரி முதல் வாரத்தில்தான் குழந்தை பிறப்பதற்கான தேதி குறிக்கப்பட்டது.

ஆனால், நேற்றிரவு (டிசம்பர் 27) வலி அதிகமானதால் மஞ்சு பார்கவியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நேற்றிரவு 7.55 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்பாவான யோகி பாபுவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in