Published : 28 Dec 2020 12:11 PM
Last Updated : 28 Dec 2020 12:11 PM

வெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகல்

சத்தியமங்கலம்

வெற்றிமாறன் இயக்கி வரும் படத்திலிருந்து பாரதிராஜா விலகியுள்ளார்.

'அசுரன்' படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

தற்போது, இப்படத்திலிருந்து பாரதிராஜா விலகியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. பாரதிராஜாவுக்குப் பதிலாக கிஷோர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூரி படத்தை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான பணிகளை வெற்றிமாறன் தொடங்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x