Published : 14 Dec 2020 05:23 PM
Last Updated : 14 Dec 2020 05:23 PM
ஹிப் ஹாப் ஆதி - விதார்த் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'அன்பறிவு' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'பட்டாஸ்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது சத்யஜோதி நிறுவனம். மேலும், ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கவுள்ளார். 'அன்பறிவு' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஹிப் ஹாப் ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
We're excited to announce our next film #Anbarivu starring @hiphoptamizha, Directed by @dir_Aswin.
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 14, 2020
Co-starring Napoleon, Vidharth @kashmira_9, Saikumar, Urvashi, @sangithakrish & Dheena.
DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Stunt Dinesh Subbarayan | @DoneChannel1 pic.twitter.com/dNsOseWjR9
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT