Published : 03 Dec 2020 05:35 PM
Last Updated : 03 Dec 2020 05:35 PM

'ரூபம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

பார்வதி நாயர் நடிக்கும் படத்துக்கு 'ரூபம்' எனத் தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'டாக்டர்', 'அயலான்', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

இந்தப் படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ரூபம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி, சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் 'ரூபம்' படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x