‘கடைசி வரை சிரிக்கவைப்பதே நோக்கம்’ - ‘கூலி நம்பர் 1’ படம் குறித்து வருண் தவான் பகிர்வு

‘கடைசி வரை சிரிக்கவைப்பதே நோக்கம்’ - ‘கூலி நம்பர் 1’ படம் குறித்து வருண் தவான் பகிர்வு
Updated on
1 min read

‘கூலி நம்பர் 1’ படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை உங்களைச் சிரிக்கவைப்பதே எங்கள் நோக்கம் என்று நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

1995ஆம் ஆண்டு கோவிந்தா, கரிஷ்மா கபூர் நடிப்பில் வெளியான படம் ‘கூலி நம்பர் 1’. இப்படம் தற்போது அதே பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவான், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை டேவிட் தவானே மீண்டும் இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் வருண் தவான் பேசியதாவது:

''2020 மிகவும் கடினமான ஆண்டாக இருக்கிறது. இதைப் பற்றி நான் பெரிதாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாம் அதை அனுபவரீதியாக உணர்ந்து வருகிறோம். ‘கூலி நம்பர் 1’ படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை உங்களைச் சிரிக்கவைப்பதே எங்கள் நோக்கம்.

டிசம்பர் 25 அன்று ஒரு பாதுகாப்பான சூழலில் குடும்பத்துடன் அமர்ந்து சிரிப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியான நாம் மகிழ்வுடன் 2021ஆம் ஆண்டுக்குள் நுழைவோம்''.

இவ்வாறு வருண் தவான் கூறியுள்ளார்.

இப்படத்தில் பரேஷ் ராவல், ஜாவேத் ஜாஃப்ரி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in