தகாத வார்த்தையில் கேலி: ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி

தகாத வார்த்தையில் கேலி: ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி
Updated on
1 min read

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டில் நிலவி வரும் மாபியா விவகாரம், போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கணா பாலிவுட் பிரபலங்கள் பலரையும் விமர்சித்து வந்தார். இதற்கு எதிர்கருத்து வைத்த நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடி வந்தார். இதனால் கங்கணா ரசிகர்கள் பலரும் சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பலரின் சமூக வலைதள பக்கங்களில் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை டாப்ஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர் ஒருவர் அவரை ‘தகுதியற்ற நடிகை’ என்று திட்டி அவருக்கு மேசேஜ் செய்துள்ளார். அந்த பயனரின் மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள டாப்ஸி அவருக்கு பதிலடியை கொடுத்துள்ளார்.

இரண்டு ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்துள்ள டாப்ஸி, அவற்றில் ‘நான் எதை உயர்த்த வேண்டும்? நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்களுக்கு தெரியாத தரத்தை மட்டுமே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது மற்றொரு ஸ்க்ரீன்ஷாட்டில் ‘நீங்கள் மிகவும் பிடிவாதமானவர் என்று நினைக்கிறேன். இதை மீண்டும் ஒரு நான்கைந்து முறை எழுதுங்கள். அப்போதாவது எனக்கு புரிகிறதா என்று பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே பலமுறை தகாத மொழியில் பேசும் ரசிகர்களின் பதிவை பொதுவெளியில் பகிர்ந்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் டாப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in