Published : 24 Nov 2020 19:41 pm

Updated : 24 Nov 2020 20:11 pm

 

Published : 24 Nov 2020 07:41 PM
Last Updated : 24 Nov 2020 08:11 PM

ரெஜினாவின் புதிய படம் அறிவிப்பு

regina-new-film

டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா நடித்து வரும் படத்துக்கு 'ப்ளாஷ்பேக்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கொரில்லா'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கி இருந்தார் டான் சாண்டி. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார்.


இந்தக் கதையைக் கேட்ட ரெஜினா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்கு 'ப்ளாஷ்பேக்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

இளவரசு, அனுசியா, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்ட பலர் ரெஜினாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தவறவிடாதீர்!


Flash backFlash back shootingOne minute newsReginaDirector don sandyப்ளாஷ் பேக்ரெஜினாடான் சாண்டிப்ளாஷ் பேக் படப்பிடிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x