Published : 23 Nov 2020 12:32 PM
Last Updated : 23 Nov 2020 12:32 PM

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: வெற்றி பெற்றவர்கள் யார்?- முழு விவரம்

சென்னை

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

2020-22ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் கடும் போலீஸ் பாதுகாப்பு இடையே காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் பதிவான 1,050 வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் என வரிசையாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் எண்ணப்பட்ட தலைவருக்கான வாக்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டி.ராஜேந்தர் 388 வாக்குகள், பி.எல்.தேனப்பன் 88 வாக்குகள் பெற்றனர். 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துணைத் தலைவர்களாக சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

செயலாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும், டி.ஆர் அணியைச் சேர்ந்த மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் முரளி அணி, டி.ஆர் அணி, சுயேச்சையாகப் போட்டியிட்டவர்கள் என மாறி மாறி முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x