'தாக்கட்' படத்துக்காக கங்கணா ரணவத் தீவிர சண்டைப் பயிற்சி

'தாக்கட்' படத்துக்காக கங்கணா ரணவத் தீவிர சண்டைப் பயிற்சி
Updated on
1 min read

'தலைவி' படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கும் நடிகை கங்கணா ரணவத் அதே நேரத்தில் தனது அடுத்த படத்துக்கான தயாரிப்பு வேலைகளையும் துவக்கியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'தலைவி' படத்தில் கங்கணா ரணவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏஎல் விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் அரவிந்த்சுவாமி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக எடை கூட்டியிருந்த கங்கணா, 'தாக்கட்' படத்துக்காக மீண்டும் எடையைக் குறைத்து கடுமையான பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தார். தற்போது 'தாக்கட்' படத்துக்காக தீவிரமான சண்டைப் பயிற்சியையும் கங்கணா மேற்கொண்டு வருகிறார்.

தனது சண்டைப் பயிற்சி புகைப்படங்களையும், இயக்குநர் உள்ளிட்ட சிலருடன் கலந்துரையாடும் புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் கங்கணா, "எனக்கு ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வது பிடிக்காது. ஆனால் இது போன்ற சமயத்தில் ஒருவர் தனது ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது நான் ஒரு குதிரையைப் போல ஓடிக் கொண்டிருந்தேன்.

எனவே 'தலைவி' படப்பிடிப்போடு சேர்த்து 'தாக்கட்' திரைப்படத்துக்கான சண்டை ஒத்திகைகளையும் ஜேஸனோடு ஆரம்பித்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'தாக்கட்' படத்தில் உளவாளி கதாபாத்திரத்தில் கங்கணா நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தி ரஸ்னீஷ் கை இயக்குகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in