Last Updated : 29 Oct, 2015 05:15 PM

 

Published : 29 Oct 2015 05:15 PM
Last Updated : 29 Oct 2015 05:15 PM

அட்லீ படத்துக்காக விஜய் பாடிய பாடல்

அட்லீ இயகக்த்தில் நடித்து வரும் படத்துக்காக, ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலை முடித்திருக்கிறார் விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் படத்தை தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளி வெளியிட திட்டமிட்டார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் விஜய்யை இரண்டு பாடல்களைப் பாட வைக்க முடிவு செய்தார். இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்தார். விஜய் பாடவிருக்கும் பாடல்களை, வேறு ஒருவரை வைத்து பாட வைத்து படப்பிடிப்புக்காக கொடுத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், இன்று காலை ஜி.வி.பிரகாஷின் ஸ்டூடியோவுக்கு வந்த விஜய் ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார். 'செல்லக்குட்டி' என்ற தொடங்கும் இப்பாடலை ஏற்கெனவே காட்சிப்படுத்திவிட்டார் இயக்குநர் அட்லீ. இப்படத்துக்காக விஜய் பாடவிருக்கும் இன்னொரு பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x