Published : 18 Nov 2020 07:23 PM
Last Updated : 18 Nov 2020 07:23 PM

'ரேஞ்சர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரேஞ்சர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

'வால்டர்' படத்தைத் தொடர்ந்து 'ரங்கா', 'மாயோன்', 'கபடதாரி', 'ரேஞ்சர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிபிராஜ். இதில் 'கபடதாரி', 'ரேஞ்சர்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

தற்போது 'ரேஞ்சர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஜாக்சன் துரை' இயக்குநர் தரணிதரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் சிபிராஜுடன் நடித்துள்ளனர்.

முழுக்கக் காட்டுக்குள் நடக்கும் கதை என்பதால், தற்போது கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

மகாராஷ்டிர மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி, பல மனிதர்களை அடித்துக் கொன்று தின்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது.

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அரோல் கொரேலி இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக கல்யாண் வெங்கட்ராமன், எடிட்டராக சிவா நந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x