கொரிய படத்தின் ட்ரெய்லரில் ‘அக்லி’ பட பாடல் - அனுராக் காஷ்யப் மகிழ்ச்சி

கொரிய படத்தின் ட்ரெய்லரில் ‘அக்லி’ பட பாடல் - அனுராக் காஷ்யப் மகிழ்ச்சி
Updated on
1 min read

2016ஆம் ஆண்டு கொரிய இயக்குநர் யன் சேங் ஹோ இயக்கத்தில் வெளியான படம் 2 ‘ட்ரைன் டூ பூசான்’. ஜோம்பி த்ரில்லர் வகை திரைப்படமான இது உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. தமிழ் உள்ள இந்திய மொழிகளிலும் டம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் தொடர்ச்சியான ‘பெனின்சுலா’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தென் கொரியாவில் வெளியானது. அப்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் இப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வரும் நவம்பர் 27 இந்தியாவில் ‘பெனின்சுலா’ திரைப்படம் வெளியாகிறது. இதற்கான ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

ட்ரெய்லரில் இந்திய ரசிகர்களுக்காக அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘அக்லி’ படத்தின் பாடலை ‘பெனின்சுலா’ படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து அனுராக் காஷ்யப் கூறியுள்ளதாவது:

‘நான் ன் சேங் ஹோ படங்களின் மிகப்பெரிய ரசிகன். கடந்த 2016ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அவரை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவர் இயக்கிய ஒரு படத்தின் எனது பட பாடல் இடம்பெறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘அக்லி’ படத்தின் பாடல் அந்த ட்ரெய்லருக்கு மிகவும் பொருந்துகிறது.

இவ்வாறு அனுராக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in