வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம் 

வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம் 
Updated on
1 min read

சத்யஜித் ரேவின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவரது 14 படங்களில் நடித்தவர் சௌமித்ர சாட்டர்ஜி. வங்காளத்தில் மிகவும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர். மிருணாள் சென் உள்ளிட்ட இன்னும் பல பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களில் சாட்டர்ஜி நடித்துள்ளார். கடைசியாகக் கடந்த ஆண்டு வெளியான 'சன்ஜ்பாதி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 85 வயதாகும் சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோடு சேர்த்து பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்றவர். கடந்த அக். 6 ஆம் தேதியன்று லேசான கரோனா அறிகுறிகளுடன் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மோசமானதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (15.11.20) சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் அரிந்தம் கர் கூறியுள்ளதாவது:

நரம்பியல் நிபுணர்கள், இதயநோய் நிபுணர்கள், என பல்வேறு சிறந்த மருத்துவர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அந்த மாபெரும் ஆளுமையை குணப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் அந்த முயற்சி பெருமளவில் கைகொடுக்க வில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in