Published : 11 Nov 2020 05:48 PM
Last Updated : 11 Nov 2020 05:48 PM

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் சயிஷா

பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் நாயகியாக சயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால், முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

'சிம்ஹா', 'லெஜண்ட்' ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு - பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இதுவாகும். இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

இதில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவருக்குத் தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக சயிஷா சைகல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது.

துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x