Published : 11 Nov 2020 05:45 PM
Last Updated : 11 Nov 2020 05:45 PM

தீபாவளிக்கு 'மாஸ்டர்' டீஸர்?

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீஸரைத் தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து 'மாஸ்டர்' பின்வாங்கியது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால், 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தெரிகிறது. பாடல்கள் வெளியாகிவிட்டாலும், டீஸர் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸர் வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

தற்போது, 'மாஸ்டர்' டீஸருக்கான பணிகளைப் படக்குழு முடித்துவிட்டது. தேதி, நேரம் ஆலோசனை மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x