Published : 09 Nov 2020 08:23 PM
Last Updated : 09 Nov 2020 08:23 PM

ஆமிர்கான் திரைப்படத்தில் ஷாரூக்கான் கௌரவத் தோற்றம் 

ஆமிர்கானின் 'லால் சிங் சட்டா' திரைப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.

இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார்.

மும்முரமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் ஷாரூக்கான் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. மேலும், ஷாரூக்கின் காட்சிகளை ஆமிர்கானே இயக்கியிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காட்சிகளின் படப்பிடிப்பை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஷாரூக் முடித்துவிட்டதாகவும், அதை முடித்துவிட்டே துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுவரை ஷாரூக்கும் ஆமிர்கானும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று 'லால் சிங் சட்டா' வெளியாகிறது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x