பிருத்விராஜ் படத்தில் இணையும் ‘அருவி’ அதிதி பாலன்

பிருத்விராஜ் படத்தில் இணையும் ‘அருவி’ அதிதி பாலன்

Published on

பிருத்விராஜ் நடிக்கவுள்ள ‘கோல்டு கேஸ்’ என்ற மலையாளப் படத்தில் ‘அருவி’ நடிகை அதிதி பாலன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘அருவி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதிதி பாலன். பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'அருவி' படத்துக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த அதிதி பாலன் மலையாளத்தில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடிப்பில் லிஜு ஜோசப் இயக்கவுள்ள ‘படவெட்டு’ என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் நிவின் பாலி படத்தைத் தொடர்ந்து, மற்றொரு மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் அதிதி பாலன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கோல்டு கேஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தைத் தானு பலக் இயக்கவுள்ளார். பிளான் ஜே ஸ்டுடியாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரகாஷ் அலெக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு ஸ்ரீநாத் திரைக்கதை எழுதுகிறார்.

பிருத்விராஜ் தற்போது நடித்து வரும் ‘ஜன கண மன’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘கோல்டு கேஸ்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in