Published : 26 Oct 2020 04:35 PM
Last Updated : 26 Oct 2020 04:35 PM

கார்த்தியின் 'சுல்தான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார்.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா தவிர்த்து பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். ஆனால், இதுவரை யாருடைய பெயரையும் அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. 'சுல்தான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். பொங்கல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x