Published : 26 Oct 2020 12:18 PM
Last Updated : 26 Oct 2020 12:18 PM

சிம்புவின் 'ஈஸ்வரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு 'சம்பவம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'மாநாடு' படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'ஈஸ்வரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும் படம் இது. ஆகையால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கையில் பாம்புடன் முழுக்க உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் லுக் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுமார் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு, 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிம்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x