Published : 20 Oct 2020 10:04 PM
Last Updated : 20 Oct 2020 10:04 PM

மீண்டும் இயக்குநராகும் ஹிப் ஹாப் ஆதி?

சென்னை

புதிய படமொன்றை இயக்கி, நாயகனாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முதல் பாடகர், பின்பு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹா ஆதி. 2017-ம் ஆண்டு 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வரவேற்பைப் பெற்றதால், பல்வேறு இயக்குநர்களும் அவரிடம் கதைகள் கூறி வந்தார்கள்.

அனைத்தையும் விடுத்து, தானே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இந்தப் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் ஆதியுடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x