Published : 29 Sep 2015 10:52 AM
Last Updated : 29 Sep 2015 10:52 AM

வாள் சுற்றிய விஜய்.. 3 மொழிகளில் பேசிய ஸ்ரீதேவி - வெளிவராத ‘புலி’ சுவாரஸ்யங்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, விஜய குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘புலி’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் பற்றி இதுவரை மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சுவாரஸ்யமான விஷயங்கள்:

>‘விஜய்தான் நாயகன்’ என்று தீர்மானித்துவிட்டுதான் கதை எழுதியுள்ளார் இயக்குநர் சிம்புதேவன். கதையைக் கேட்டதுமே, ‘‘சூப்பர்! ஒண்ணும் மாத்த வேண்டாம். முழுசா அப்படியே பண்ணிடுங்க. எல்லா தரப்பினருக்கும் பிடிக்கிற கதை என்பதால் கூடுதல் கவனம் எடுத்து செய்யுங்கள்’’ என்றாராம் விஜய். ரசிகர்கள் விரும்பும் ‘பஞ்ச்’களுக்கும் படத்தில் பஞ்சமில்லையாம்!

>சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோ வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ளனர். ‘ஜிங்கிலியா’ பாடலை திரையில் பார்க்கும்போது அரங்கின் பிரம்மாண்டம் தெரியும் என்கின்றனர்.

>கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கலை இயக்குநர் முத்துராஜ், கிராபிக்ஸ் வல்லுநர் கமலக்கண்ணன் இணைந்து பணியாற்றினர். ‘நான் ஈ’ படத்தில் 1200 கிராபிக்ஸ் ஷாட்ஸ், ‘மஹாதீரா’வில் 1400, ‘பாகுபலி’யில் 2000. அவற்றைவிட ‘புலி’யில்தான் அதிகம். இதில் மொத்தம் 2,400 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன்.

>‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத் துக்கு பிறகு, நிறைய கதைகள் கேட்டும் ஸ்ரீதேவிக்கு எதுவுமே பிடிக்கவில்லையாம். இந்த கதை யைக் கேட்டதும் பிடித்து விட்டதால், உடனே ஓகே சொல்லிவிட்டார். படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசியது ஸ்ரீதேவி மட்டுமே.

>படத்தின் முதன்மை நாயகி ஸ்ருதிஹாசன். காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது உடல்நலம் சரியில்லாமல் போனதாம். ஆனாலும், மலை மீது ஏறும் காட்சிகளிலும் தயங்காமல் பங்கேற்று படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஸ்ருதி.

>ஹன்சிகா இதில் இளவரசி. அவருக்கு மேக்கப் போட 3 மணி நேரம் ஆகுமாம். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6 மணிக்கே வந்து மேக்கப் போட ஆரம்பித்து தயாராக இருப்பாராம்.

>தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், வித்யூ, இமான் அண்ணாச்சி இணைந்து காமெடி செய்திருக்கின்றனர்.

>‘பாகுபலி’யோடு ‘புலி’யை ஒப்பிடக் கூடாது. இரண்டும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டவை. இதில் போர்க் காட்சிகள் எல்லாம் கிடையாது என்கிறது படக்குழு.

>விஜய் தன் வசனங்களை முந்தைய நாளே வாங்கிச் சென்றுவிடுவாராம். சண்டைக் காட்சிக்காக பிரத்யேகமாக வாள் சுற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டாராம்.

>‘வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை’ என்று கூறிவந்த சுதீப், இந்த கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லிவிட்டார். அவருக்கு இந்த படத்தில் உலோகத்தால் ஆன உடை. அதை அணிந்தால் உட்கார முடி யாது. படப்பிடிப்பு முடியும் வரை நின்றுகொண்டே நடித்துள்ளார்.

>விஜய், ஸ்ருதிஹாசன் பாடியிருக்கும் ‘ஏண்டி ஏண்டி’ பாடலை தாய்லாந்து, கேரளாவில் படமாக்கினர்.

>தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 3,000 திரையரங்குகளுக்கு அதிகமாக வெளியிட உள்ளனர். ஜப்பான், சீனாவில் வெளியிடவும் பேச்சு நடக்கிறது.

>‘துப்பாக்கி’ படத்தில் இருந்தே, தன் படம் பற்றி விஜய் பேட்டி அளிப்ப தில்லை. ‘புலி’க்கும் அப்படியே. ஆனால், ரிலீஸுக்கு முன்பு ட்விட் டரில் ரசிகர்களுடன் அவர் கலந்து ரையாட வாய்ப்பு இருக்கிறது என்கி றார்கள்.

>விஜய் இந்த படத்தில் சித்திரக் குள்ள னாக நடித்திருக்கிறாரா? என்பது போன்ற விஷயங்களை எல்லாம் ‘வெள்ளித்திரையில் காண்க’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x