இந்த ஆண்டில் வாழ்க்கையை பற்றிய மோசமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் - ஸ்ருதி ஹாசன்

இந்த ஆண்டில் வாழ்க்கையை பற்றிய மோசமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் - ஸ்ருதி ஹாசன்
Updated on
1 min read

2020ஆம் ஆண்டில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘2019ஆம் ஆண்டை திரும்பி பார்க்கிறேன். மன்னித்து விடு! நான் உன்னை வெறுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இந்த ஆண்டும் கிட்டத்தட்ட முடியப்போகிறது. வாழ்க்கையை பற்றியும் மக்களைப் பற்றியும் மோசமான விஷயங்களையும், மனிதத்தை பற்றியும், பலம் பலவீனம் ஆகியவற்றைப் பற்றியும் இந்த ஆண்டு கற்றுக் கொண்டேன். இயல்பிலேயே நான் எவ்வளவு தனிமையானவள் என்பதையும், என் வாழ்வில் இருக்கும் மிகச்சில மக்களை நான் எந்த அளவு மதிக்கிறேன் என்பதையும் புரிந்து கொண்டேன்.

கலையை பற்றியும், முற்றிலும் புதிய வழியில் அது எனக்கு கொடுத்த அன்பையும் தெரிந்து கொண்டேன். இந்த இருள் நிறைந்த காலகட்டத்தில் முற்றிலும் புதிய வழியும் நானும் அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டேன்.

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் படம் 'லாபம்'. இதில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in