Last Updated : 30 Sep, 2015 06:02 PM

 

Published : 30 Sep 2015 06:02 PM
Last Updated : 30 Sep 2015 06:02 PM

டிசம்பர் 18ம் தேதி கெத்து வெளியிட திட்டம்

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'கெத்து' படத்தை டிசம்பர் 18ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன், கருணாகரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கெத்து' படத்தை இயக்கி வருகிறார் திருக்குமரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கொச்சின் உள்ளிட்ட பகுதிகள் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு கோவா சென்ற படக்குழு அங்கு சில முக்கியமான காட்சிகளை படமாக்கி இருக்கிறது.

தற்போது இப்படத்தின் பிராதன படப்பிடிப்பு காட்சிகள் அனைத்துமே முடிவுற்று விட்டன. இன்னும் 3 பாடல்கள் காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தை டிசம்பர் 18ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'கதகளி' படமும் டிசம்பர் வெளியீடு என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x