Last Updated : 10 Oct, 2020 07:13 PM

 

Published : 10 Oct 2020 07:13 PM
Last Updated : 10 Oct 2020 07:13 PM

செளமித்ர சாட்டர்ஜி கவலைக்கிடம்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

மும்பை

மூத்த வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மோசமானதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சாட்டர்ஜி. 85 வயதான இவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் சாட்டர்ஜி அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அபிஜான் என்கிற ஆவணப் படத்துக்காக சாட்டர்ஜி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி இந்தப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்கிருந்துதான் சாட்டர்ஜிக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே அவருக்கு நுரையீரல் அடைப்புப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்ததால் கரோனா தொற்று அவரது உடலை இன்னும் பலவீனமாக்கியுள்ளது. கடந்த வருடம் கூட நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பல வங்காள நடிகர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இதில் பிரபல நடிகை கோயல் மல்லிக், அவரது தந்தை ரஞ்சித் மல்லிக், இயக்குநர் ராஜ் சக்ரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x