பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியது: போட்டியாளர்களின் பட்டியல் விவரம்

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியது: போட்டியாளர்களின் பட்டியல் விவரம்
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தொடங்கியது. அதன் போட்டியாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்துத் திட்டமிடப்படாமல் இருந்தது.

இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை உறுதி செய்தார்கள். அதற்கான ப்ரோமோவை வெளியிட்டார் கமல். இதனால், பிக் பாஸ் ரசிகர்கள் இந்தாண்டு நிகழ்ச்சியை ஆர்வமுடன் எதிர்பார்த்தார்கள்.

அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பு என்று அறிவிக்கப்படவுடன், இவர்கள் எல்லாம் போட்டியாளர்கள் எனப் பலருடைய பெயர்கள் அடிபட்டது. அதன்படி இன்று (அக்டோபர் 4) விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கியது. இந்தாண்டும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்தாண்டு பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியல் இதோ:

* ரியோ

* சனம் ஷெட்டி

* ரேகா

* பாலா

* அனிதா சம்பத்

* ஷிவானி

* ஜித்தன் ரமேஷ்

* வேல்முருகன்

* ஆரி

* சோம்

* கேப்ரில்லா

* அறந்தாங்கி நிஷா

* ரம்யா பாண்டியன்

* சம்யுக்தா

* சுரேஷ் சக்ரவர்த்தி

* ஆஜீத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in