Published : 30 Sep 2020 06:00 PM
Last Updated : 30 Sep 2020 06:00 PM

குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் சிம்பு - சுசீந்திரன் படம்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது. அதிகமான நடிகர்கள் கொண்ட படம் என்பதால், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதனிடையே, 'மாநாடு' படத்துக்கு முன்பாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது, சிம்பு - சுசீந்திரன் படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவுள்ளதை உறுதி செய்தார்கள்.

அக்டோபர் முதல் வாரத்தில் சிம்பு - சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்க, சுசீந்திரன் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பரில் 'மாநாடு' படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x