Last Updated : 12 Sep, 2015 02:40 PM

 

Published : 12 Sep 2015 02:40 PM
Last Updated : 12 Sep 2015 02:40 PM

பரபரப்பான முதற்கட்ட பணியில் சசிகுமாரின் புதிய படம்

'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால், சசிகுமாரின் அடுத்த படத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சசிகுமாருக்கு கையில் அடிபட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. அவருடைய கை சரியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் நடைபெற்று வரும் இறுதிகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 17ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பும் தஞ்சாவூரிலேயே துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

புதுமுக இயக்குநர் இயக்கவிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து இருக்கிறார். தற்போதே இப்படத்துக்கான பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார் இமான். தஞ்சாவூரில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x