Last Updated : 25 Sep, 2020 10:40 AM

 

Published : 25 Sep 2020 10:40 AM
Last Updated : 25 Sep 2020 10:40 AM

மும்பை கட்டிட விபத்து -  உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மீது கங்கணா குற்றச்சாட்டு

மும்பை அருகே பிவன்டி நகரின் தமங்கர் நகா பகுதியில் ஜிலானி என்ற பெயரில் 3 மாடி கட்டிடம் இருந்தது. 43 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் கடந்த செப் 21. அன்று அதிகாலையில் இக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விபத்துக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியமே காரணம் என்று நடிகை கங்கணா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:

உத்தவ் தாக்கரே மற்றம் சஞ்சய் ராவத் இருவரும், என்னுடைய வீட்டை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக இடிக்கும் நேரத்தில் இந்த கட்டிடத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தால் ஏற்க்குறைய இந்த 50 பேரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். பாகிஸ்தானால் பல வீரர்கள் புல்வாமாவில் இறந்ததை போல உங்களுடைய அலட்சியத்தால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். மும்பைக்கு என்ன ஆகப்போகிறது என்பதை கடவுளுக்கே வெளிச்சம்.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்கணாவின் மும்பை அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x