Published : 20 Sep 2020 09:10 PM
Last Updated : 20 Sep 2020 09:10 PM

தமிழில் 'நிசப்தம்' தலைப்பு மாற்றம்

சென்னை

'நிசப்தம்' என்ற தலைப்பை 'சைலன்ஸ்' என்று மாற்றியுள்ளது படக்குழு

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான படம் ‘சைலன்ஸ்’. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது.

தமிழில் இந்தப் படத்துக்கு 'நிசப்தம்' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியிட்டது படக்குழு. இந்தப் பெயருடனேயே விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், 'நிசப்தம்' என்ற தலைப்பை ஏற்கனவே ஒருவர் வாங்கி வைத்துள்ளார். ஆகையால், இந்தத் தலைப்பில் தமிழில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

உடனடியாக தமிழ் - தெலுங்கு ஆகிய இருமொழிகளைத் தவிர்த்து, இதர மொழிகளில் 'சைலன்ஸ்' என்ற பெயரில் வெளியாகிறது. அதே பெயரை தமிழுக்கும் வைத்துவிட்டது படக்குழு. தற்போது தெலுங்கில் 'நிசப்தம்' மற்ற இதர மொழிகளில் 'சைலன்ஸ்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெய்லரை நாளை (செப்டம்பர் 21) விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x