இணையத்தில் வெளியான மலைகா அரோராவின் கரோனா ரிப்போர்ட்: சகோதரி காட்டம்

இணையத்தில் வெளியான மலைகா அரோராவின் கரோனா ரிப்போர்ட்: சகோதரி காட்டம்
Updated on
1 min read

மலைகா அரோராவின் கரோனா தொற்று தொடர்பான ரிப்போர்ட் இணையத்தில் வெளியானதற்கு அவருடைய சகோதரி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அளவில் கரோனா தொற்று அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 6) இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக அர்ஜுன் கபூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருடைய காதலி மலைகா அரோராவுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதில் மலைகா அரோரா இன்று (செப்டம்பர் 7) காலை தான் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து சில மணித்துளிகளில் சமூக வலைதளத்தில் அவருடைய கரோனா தொற்று உறுதி செய்ததிற்கான ரிப்போர்ட் இணையத்தில் வெளியானது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக மலைகா அரோராவின் சகோதரி அம்ரிதா அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:

"பிரபலமாக இருப்பதற்கான விலையா? புதிய சகஜ நிலையா? நோய் வந்திருக்கிறது ஆனால் உடலில் இல்லையா? இது சரி தானா? பல்வேறு வாட்ஸ் அப் குழுமங்களில், ஃபேஸ்புக்கில், இன்னும் மற்ற ஊடகங்களில் என் சகோதரியின் பரிசோதனை முடிவுகள் பகிரப்பட்டுள்ளன. தனக்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வருமென அவர் நம்பிக்கொண்டிருக்கும், இன்னும் தேறி வரத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சூழலா? இது எப்படிச் சரியாகும்? மனிதர்களாகிய நாம் இருக்கும் இந்த மனநிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது"

இவ்வாறு அம்ரிதா அரோரா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in