Last Updated : 27 Aug, 2020 12:03 PM

 

Published : 27 Aug 2020 12:03 PM
Last Updated : 27 Aug 2020 12:03 PM

18 நாட்களில் எடுக்கப்பட்ட ‘சி யு சூன்’ திரைப்படம்: இயக்குநர் தகவல்

ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘சி யு சூன்’ திரைப்படம் 18 நாட்களில் எடுக்கப்பட்டதாக இயக்குநர் மகேஷ் நாராயண் கூறியுள்ளார்.

ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘சி யு சூன்’. மகேஷ் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் முழுக்க முழுக்க செல்போனில் படமாக்கப்பட்ட இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. மெய்நிகர் தொலைத்தொடர்பு மென்பொருள் மூல உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஃபஹத் பாசிலே தயாரிக்கவும் செய்துள்ளார்.

இப்படம் உருவான விதம் குறித்து இயக்குநர் மகேஷ் நாராயண் கூறியிருப்பதாவது:

''நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது நாங்கள் வீட்டில் அமைதியற்ற நிலையில் இருந்தோம். ஃபஹத் பாசிலும் நானும் இ-மெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு, பரிசோதனை முயறிசியாக ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த இ-மெயிலின் தலைப்பு ‘மேட்னெஸ்’ (பைத்தியக்காரத்தனம்) என்று இருந்தது எனது நினைவுக்கு வருகிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது அபார்ட்மெண்ட்டில் சந்தித்து இதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பது குறித்து விவாதித்தோம். படம் குறித்து முடிவு செய்யப்பட்ட பிறகு எங்கள் குழுவினர் அதற்கான வேலைகளில் இறங்கினார்கள்.

கணினி திரையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட எந்தவொரு திரைப்படத்தையும் எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. இதை எப்படிப் படமாக்குவது, முழுநீளப் படமாக எடுக்கலாமா, அல்லது குறும்படமாக எடுக்கலாமா? அதை எப்படி எடிட் செய்வது என்ற பயம் எங்களுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், இந்த யோசனை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இரண்டு வாரங்களில் கதையை எழுதி முடித்தேன். கதை எழுதப்பட்டதும், உடனடியாக நடிகர்களும் தயாரானார்கள். படத்தை 18 நாட்களில் எடுத்து முடித்தோம். எடிட்டிங் பணிகளுக்குச் சில நாட்கள் ஆயின''.

இவ்வாறு மகேஷ் நாராயண் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x