சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் ஒரு கிரிமினல்; இது கொலையாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் ஒரு கிரிமினல்; இது கொலையாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Published on

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினர்,வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு சுஷாந்த்தின் நண்பரான சித்தார்த் பிதானி சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தனக்கு அனுப்பியதாக சில வாட்ஸப் மெசேஜ்களை மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த மெசேஜ்களை கடந்த பிப்ரவரி மாதம் சுஷாந்த்துக்கும் அனுப்பியுள்ளார் சித்தார்த்.

இந்நிலையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருப்பதாக அவரது குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ரியா குடும்பத்தினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் வரை பிதானி சுஷாந்த் குடும்பத்தோடு தொடர்பில் இருந்துள்ளார். மேலும் சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். இதை சுஷாந்த் குடும்பத்தினரும் நம்பியுள்ளனர். ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு ரியா குடும்பத்தினருக்கு உதவி செய்ய முயற்சி செய்துள்ளார். ரியாவுக்கு அவர் எழுதிய இ மெயிலை வைத்து இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் சுஷாந்த் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் இரட்டை வேடம் போடுகிறார். அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிமினல். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in