இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

Published on

இயக்குநர் ஷங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஷங்கர். 1993-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதால், தொடர்ச்சியாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களையே இயக்கினார். இதனாலேயே பலரும் அவரை 'பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்' என்றே அழைத்தார்கள்.

'காதலன்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்', 'முதல்வன்', 'பாய்ஸ்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', 'நண்பன்', 'ஐ', '2.0' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் மாறி 'காதல்', 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'வெயில்', 'கல்லூரி', 'ஈரம்', 'ரெட்டைச்சுழி', 'அனந்தபுரத்து வீடு'

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in