Published : 03 Aug 2020 10:13 am

Updated : 03 Aug 2020 10:20 am

 

Published : 03 Aug 2020 10:13 AM
Last Updated : 03 Aug 2020 10:20 AM

நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய்: வைரலாகும் புகைப்படம்

vijay-video-call-to-friends

சென்னை

வீடியோ காலில் தனது நண்பர்களுடன் விஜய் பேசிய புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு விஜய் எங்குமே வெளியே வரவில்லை. கரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே இருக்கிறார். கரோனா ஊரடங்கு சமயத்தில் 'மாஸ்டர்' படக்குழுவினரிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலானது.


அதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 2) தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி நேற்று சமூக வலைதளத்தில் பலரும் நண்பர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்து வந்தார்கள். அப்போது விஜய், தன் நெருங்கிய நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். அதன் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இந்தப் புகைப்படத்தை சஞ்சீவ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். இதனை விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்யத் தொடங்கவே, வைரலாகி வருகிறது.

தவறவிடாதீர்!


நண்பர்கள் தினம்விஜய்விஜய்யின் நண்பர்கள்நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய்விஜய்யின் புகைப்படம்விஜய் ரசிகர்கள்One minue newsVijayVijay fansHappy friendship dayVijay video call

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author