Published : 29 Jul 2020 11:42 AM
Last Updated : 29 Jul 2020 11:42 AM

'கே.ஜி.எஃப் 2' அப்டேட்: சஞ்சய் தத் லுக் வெளியீடு

சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தில் அவருடைய லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 29) இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்தின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு 'கே.ஜி.எஃப் 2' படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட்டு அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு. இதற்கு சஞ்சய் தத் நன்றி தெரிவித்துள்ளார்.

'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஆதிரா என்ற கொடூர வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத். கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன், ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியைப் படமாக்க 'கே.ஜி.எஃப் 2' படக்குழு முடிவு செய்துள்ளது. அதோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.

மேலும், 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த வெளியீட்டுத் தேதி சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x