Published : 28 Jul 2020 07:29 AM
Last Updated : 28 Jul 2020 07:29 AM

தனுஷ் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

சென்னை

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்து துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி இந்தி, ஹாலிவுட் திரையுலகிலும் நடித்துள்ளார்.

2002-ம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் தனுஷ். பின்பு 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வேலையில்லா பட்டதாரி', 'வட சென்னை' உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர். 'பா. பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானவர்.

இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் தனுஷ். இதனை முன்னிட்டு அவருடன் நடித்தவர்கள், இயக்கியவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்திலிருந்து 'ரகிட ரகிட' பாடல் வெளியாகவுள்ளது. 'கர்ணன்' படத்தின் போஸ்டரும், சிறு வீடியோவும் வெளியாகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால், தனுஷ் யாரையும் நேரில் சந்திக்கவில்லை. வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x