'சித்தி 2' சீரியலின் வில்லி மாற்றம்

'சித்தி 2' சீரியலின் வில்லி மாற்றம்
Updated on
1 min read

'சித்தி 2' சீரியலில் வில்லியாக நடித்து வந்த ஸ்ரீஷாவுக்குப் பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலான 'சித்தி 2'விலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதில் பொன்வண்ணனுக்குப் பதிலாக நிழல்கள் ரவி, ஷில்பாவுக்குப் பதிலாக ஜெயலட்சுமி நடித்து வந்தார்கள்.

'சித்தி 2' சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீஷா. தற்போது கரோனா அச்சுறுத்தலால் அவரால் அங்கிருந்து வர இயலவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in