Published : 23 Jul 2020 01:36 PM
Last Updated : 23 Jul 2020 01:36 PM

'வாடிவாசல்' அப்டேட்: சூர்யாவின் கதாபாத்திர லுக் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திர லுக் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய ரசிகர்களும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' படம் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் 'அருவா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து இயக்குநர் பாண்டிராஜ் உடன் படம் பண்ணவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, 'வாடிவாசல்' படம் உருவாகவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு யாரும் எதிர்பாராதவிதமாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது 'வாடிவாசல்' படக்குழு.

அந்தப் படத்தின் சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்புக்காக பல்வேறு லுக்குகள் திட்டமிடப்பட்டு, இறுதியாக ஒரு லுக்கை முடிவு செய்துள்ளனர். அந்தக் கதாபாத்திர வடிவமைப்பையே போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x