Last Updated : 09 Sep, 2015 11:45 AM

 

Published : 09 Sep 2015 11:45 AM
Last Updated : 09 Sep 2015 11:45 AM

விதார்த், பாரதிராஜா இணைப்பில் உருவாகும் புதிய படம்

புதுமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வித்தார்த், இயக்குநர் பாரதிராஜா நடிக்க புதுப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'குற்றமே தண்டனை' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாயகனாக விதார்த் நடித்திருக்கும் இப்படத்தை அவருடைய தம்பி தயாரித்திருக்கிறார்.

'குற்றமே தண்டனை' படத்தைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார் விதார்த். இப்படத்தில் அவருடைய அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடித்து வருகிறார். சென்னையில் கடந்த 2 வாரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை 'நாளைய இயக்குநர் சீசன் 3' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இயக்குநர் நித்திலன் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x