எனக்கு எதுவும் ஆகவில்லை - உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு ஹேமமாலினி மறுப்பு

எனக்கு எதுவும் ஆகவில்லை - உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு ஹேமமாலினி மறுப்பு

Published on

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலுக்கு நடிகை ஹேமமாலினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் பச்சன் குடும்பத்தின் கரோனாவிலிருந்து மீள வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் பலரும் ஹேமமாலினியின் சமூக வலைதள பக்கத்துக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்த தகவலுக்கு ஹேமமாலினி மறுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நான் மிகவும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். எனக்கு எதுவும் ஆகவில்லை; உங்களுடைய வாழ்த்துகளாலும், கிருஷ்ணருடைய அருளாலும் நான் உடல்நலத்துடன் இருக்கிறேன். உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

இவ்வாறு அந்த வீடியோவில் ஹேம மாலினி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in