Last Updated : 12 Jul, 2020 04:42 PM

 

Published : 12 Jul 2020 04:42 PM
Last Updated : 12 Jul 2020 04:42 PM

’’பாலசந்தரின் எல்லா படங்களும் பார்த்திருக்கிறேன்’’ - நடிகர், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் பெருமிதம்

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

இயக்குநர் பாலசந்தர் சார், எப்போதுமே கொண்டாடப்படவேண்டியவர். அவருடைய எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். ஆரம்பப் படங்களில் தொடங்கி ‘பொய்’ வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.

எனக்கு ‘அவர்கள்’ (கமல், ரஜினி, ரவிக்குமார், சுஜாதா நடித்தது) படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ‘அங்கும் இங்கும் பாதை உண்டு’ என்ற பாடல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், மொத்தப் படத்தின் கதையையும், இந்த ஒரு பாடலுக்குள் சொல்லியிருப்பார்கள்.

முக்கியமாக, அந்தப் பாடலைப் படமாக்கிய விதம் மிகச் சிறப்பாக இருக்கும். அழகாகப் படமாக்கியிருப்பார் பாலசந்தர் சார்.


இவ்வாறு நட்டி என்கிற நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x