Published : 11 Jul 2020 04:20 PM
Last Updated : 11 Jul 2020 04:20 PM

ட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்த ராதே ஷ்யாம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ராதே ஷ்யாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்துள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படமொன்று உருவாகி வந்தது. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இதரக் காட்சிகள் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இந்தப் படத்துக்கு 'ராதே ஷ்யாம்' என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்துமே 'ராதே ஷ்யாம்' தான் தலைப்பு என்பதால், பலரும் #RadheShyam என்ற ஹேஷ்டேக்கிலேயே ஷேர் செய்தார்கள். இதனால் ட்விட்டர் தளத்தில் உலகளவில் ட்ரெண்ட்டானது. சுமார் 24 மணி நேரத்தில் 6.3 மில்லியன் ட்வீட்கள், #RadheShyam ஹேஷ்டேக்கில் வெளியிட்டுள்ளனர்.

இது வேறு எந்தவொரு தெலுங்கு படத்துக்கும் நடந்ததில்லை. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x