Published : 11 Jul 2020 12:32 pm

Updated : 11 Jul 2020 12:32 pm

 

Published : 11 Jul 2020 12:32 PM
Last Updated : 11 Jul 2020 12:32 PM

பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கமல்; நடிகர்கள் ஒன்றிணைந்து உதவி

help-for-ponnambalam

சென்னை

பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு நடிகர்களும் உதவிகள் செய்துள்ளனர்.

சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறியவர் பொன்னம்பலம். 'அபூர்வ சகோதரர்கள்', 'மாநகர காவல்', 'வால்டர் வெற்றிவேல்', 'ஆனஸ்ட்ராஜ்', 'நாட்டாமை', 'உள்ளத்தை அள்ளித்தா', 'மாயி', 'சாமி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சிறுநீரகக் கோளாறு பிரச்சினையால் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிகிச்சைக்கு உதவியது மட்டுமல்லாமல், அவரது குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்றார் கமல்.

இதனிடையே தற்போது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார் பொன்னம்பலம். அவருடைய உடல்நிலை, உதவியவர்கள் குறித்து பொன்னம்பலம் கூறியிருப்பதாவது:

"எனக்கு 52 வயதாகிறது. வீட்டிலிருக்கும்போது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அறிந்த சரத்குமார் சார் உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்க்க பண உதவி செய்தார். பின்பு அங்கு முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகச் செயலிழப்பை உறுதி செய்தனர். மேலும், நுரையீரலில் நீர் சேர்ந்திருப்பதற்குச் சிகிச்சை அளித்தனர்.

இதனை அறிந்த விஷால் - கார்த்தி இருவரும் அடையாற்றில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதுதான் கமல் சார் பேசினார்.

"இப்போதைய காலகட்டத்தில் இதெல்லாம் சரி செய்துவிடலாம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உனது குழந்தைகளின் கல்விச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு என்ன உதவி வேண்டுமானாலும் அழைக்கவும்" என்று நம்பிக்கையூட்டினார்.

பின்பு எனது நிலையை அறிந்து ரஜினி சார் பேசினார். "எதற்கும் கவலைப்பட வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பேசுகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அடுத்த நாள் ரஜினி சாருடைய மனைவி பேசி, "கவலை வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பேசியிருக்கிறோம். ரஜினி சார் சொல்லச் சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், வீட்டுச் செலவுக்கும் பண உதவி செய்தார்.

விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். எனக்கு உதவிய, நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய அனைத்து நடிகர்களுக்கும் நன்றி".

இவ்வாறு பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

பொன்னம்பலம்பொன்னம்பலத்துக்கு உதவிபொன்னம்பலத்துக்கு சிறுநீரக உதவிமாற்று சிறுநீரகத்துக்கு உதவிரஜினி உதவிகமல் உதவிநடிகர்கள் உதவிPonnambalamHelp for ponnambalamRajiniKamalActors helpOne minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author