Last Updated : 11 Jul, 2020 10:46 AM

1  

Published : 11 Jul 2020 10:46 AM
Last Updated : 11 Jul 2020 10:46 AM

இந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்?: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு

இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு நடிகர்கள், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருபவர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை தருவதாகவும், வெளியிலிருந்து வரும் கலைஞர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன,

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் 'சடக் 2'. இது 1991-ம் ஆண்டு அவர் இயக்கிய 'சடக்' படத்தின் இரண்டாவது பாகம். இதில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் என இருவரும் நடிக்கின்றனர்.

பல்வேறு வாரிசுகள் இணைந்துள்ள இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தற்போது 'சடக் 2' படத்துக்கு மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. கைலாஷ் மானசரோவர் மலையின் படத்தை ‘சடக் 2’ படத்தின் போஸ்டரில் பயன்படுத்தியுள்ளது இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி உள்ளதாக உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷவுரப் பாண்டே வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

வழக்கை தொடர்ந்த வினய் பாண்டே இது குறித்து கூறியுள்ளதாவது:

‘சடக் 2’ படத்தின் போஸ்டரில் இந்துக்களின் கடவுளான சிவன் வசிக்கும் கைலாஷ் மானசரோவர் மலையின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, படத்தின் பெயரும், படத்தின் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் ஆகியோரின் பெயர்களும் மலைக்கு மேலே எழுதப்பட்டுள்ளன. அந்த புனிதமான மலையை விட அவர்களின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x