Last Updated : 09 Jul, 2020 01:27 PM

 

Published : 09 Jul 2020 01:27 PM
Last Updated : 09 Jul 2020 01:27 PM

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜகதீப் மறைவு

பாலிவுட்டின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜகதீப். குழந்தை நட்சத்திரமாக 1951 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்த இவர், இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஷோலே’ படத்தில் இவர் ஏற்று நடித்த ஷூர்மா போபாலி கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று (08.07.2020) இரவு 8.30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக ஜகதீப் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.

‘ஷோலே’ தவிர்த்து ஏராளமான குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களிலும் ஜகதீப் நடித்துள்ளார். அதில் ‘புரானா மந்திர்’ மற்றும் ‘அந்தாஸ் அப்னா அப்னா’ ஆகிய படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

‘ஷோலே’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு ‘ஷூர்மா போபாலி’ என்ற பெயரில் ஒரு படத்தை 1981 ஆம் ஆண்டு ஜகதீப் இயக்கினார்.

செய்யது இஷ்தியாக் அஹமது ஜாஃப்ரி என்ற இயற்பெயரைக் கொண்ட அவருக்கு ஜாவேத் மற்றும் நாவேத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x