'இந்தியன் 2' படத்தில் நடனமாட உள்ளேனா? - பாயல் கோஷ் விளக்கம்

'இந்தியன் 2' படத்தில் நடனமாட உள்ளேனா? - பாயல் கோஷ் விளக்கம்
Updated on
1 min read

'இந்தியன் 2' படத்தில் நடனமாட உள்ளது தொடர்பாக வெளியான தகவலுக்கு பாயல் கோஷ் விளக்கமளித்துள்ளார்.

2009-ம் ஆண்டு 'பிரயாணம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானவர் பாயல் கோஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'தேரோடும் வீதியிலே' படத்திலும் பாயல் கோஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில தினங்களாக 'இந்தியன் 2' மற்றும் 'புஷ்பா' படங்களில் ஒரு பாடலுக்கு பாயல் கோஷ் நடனமாடவுள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார் பாயல் கோஷ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். எப்படி என்னைப் பற்றிய இந்த வதந்திகள் பரவுகின்றன என்று தெரியவில்லை. நான் எந்தப் படத்திலும் எந்தப் பாடலுக்கும் ஆடவில்லை. என்னை யாரும் இதுபோன்ற விஷயங்களுக்கு அணுகவும் இல்லை.

கடந்த சில நாட்களாக 'இந்தியன் 2', 'புஷ்பா' போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுவது தொடர்பான மெசேஜ்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் வதந்திகளே. நான் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். எந்தப் படப்பிடிப்பிலும் நான் கலந்து கொள்ளவில்லை. அமைதியாக இருக்கவும்".

இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் நடிக்கவுள்ள படங்கள் குறித்து, "என் ரசிகர்களுக்கு - அவசரம் வேண்டாம். நிறைய கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்றில் ஒப்பந்தம் ஆனதும் நிச்சயம் அப்டேட் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார் பாயல் கோஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in