Published : 05 Jul 2020 15:56 pm

Updated : 05 Jul 2020 20:15 pm

 

Published : 05 Jul 2020 03:56 PM
Last Updated : 05 Jul 2020 08:15 PM

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'?

teddy-release-in-ott

சென்னை

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆர்யாவுடன் முழுக்கவே டெடி பொம்மை வருவது போன்ற கதை என்பதால் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தன. இதனால் நீண்ட நாட்களாக இதன் பணிகள் நடைபெற்று வந்தன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டெடி' படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படமும் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது தயாராகி இருக்கும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வரும் நிலையில் 'டெடி' படக்குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், 'டெடி' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

தவறவிடாதீர்!


டெடிஆர்யாடெடி வெளியீடுடெடி பணிகள்ஓடிடி தளத்தில் டெடிசாயிஷா சைகல்இயக்குநர் சக்தி செளந்தராஜன்இமான்TeddyAryaOne minute newsTeddy release in ott

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author