Published : 04 Jul 2020 09:38 PM
Last Updated : 04 Jul 2020 09:38 PM

தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கப்பேலா' திரைப்படம், தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது.

முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'கப்பேலா'. விஷ்ணு வேணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கரோனா ஊரடங்கினால் பலர் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. பலரும் இந்தப் படத்தைப் பார்த்து திரைக்கதை அமைப்பு, அன்னா பென் நடிப்பு என்று கொண்டாடி வருகிறார்கள். அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர்.

இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி உண்டானது. தற்போது இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதில் யாரை நடிக்க வைப்பது, இயக்க வைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கவுள்ளனர்.

முன்னதாக, மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி இருப்பது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x